மட்டக்களப்பு நகரில் நாளை கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு நகரில் நாளை(25) காலை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியிலும், தலைநகர் கொழும்பிலும் இடம்பெற்று வரும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே தாம் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் சகல அஞ்சல்துறை பணியாளர்களையும், மட்டக்களப்பு பிரதான அஞ்சலகத்தின் முன்னால் நாளை காலை 8.45 மணிக்கு வருகை தந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் தொடர் வேலை நிறுத்தத்தால் கடந்த 12ம் திகதியிலிருந்து நாட்டின் சகல அஞ்சல் சேவைகளும் ஸ்தம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.