மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருக்கு கௌரவம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும், சுகாதார நிலையியற் குழுவின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட விஷ்வகர்ம சங்கத் தலைவருமான சுதந்திர ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் தான் ஆற்றிய சமூக சேவைப் பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு தாமரைக்கேணி ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இதில், ஆலய பரிபாலன சபையினர், ஆலய பிரதம குரு சக்தி கே. குமாரதாசன் ஆசியுரையுடன், ஆலயத் தலைவர் கு.சுவேந்திரநாதன் மாநகர சபை உறுப்பினரை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.