தாமரை இலை பறிக்கச் சென்றவர்கள் குளத்தில் மூழ்கி மாயம்

Report Print Murali Murali in சமூகம்

குருணாகல், வாரியபொல - மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளத்தில் தாமரை இலை பறிப்பதற்காக படகு ஒன்றில் ஐந்து நபர்கள் சென்ற நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கிய ஐவரில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தேடி வருகின்றனர்.

இதேவேளை, கம்பஹா பகுதியை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.