யாழில் இருந்து சென்ற பாதயாத்திரை குழுவினர் காரைதீவில்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

யாழ்ப்பாணத்திலிருந்து கடந்தமே மாதம் 17ம் திகதி ஆரம்பித்த கதிர்காமம் நோக்கிச் செல்லும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினர் 38 நாட்களின் பின்னர் இன்று (24)காரைதீவில் தங்கியுள்ளனர்.

காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், காரைதீவுக்கு வருகை தந்த பாதயாத்திரைக்குழுவினரை வரவேற்றுள்ளனர்.

சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் இன்று காலை இலங்கை வானொலி விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது அனுபவங்களை பாதயாத்திரைக்குழுவினர் வெளிப்படுத்தினர்.

இதன்போது, சாமி உள்ளிட்ட10 அடியார்கள் கருத்துக்ளைப்பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.