தாமரை இலை பறிக்கச் சென்று மாயமாகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்

Report Print Shalini in சமூகம்

குருணாகல் - வாரியபொல, மலகனே குளத்தில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தாமரை இலை பறிப்பதற்காக படகு ஒன்றில் ஐந்து நபர்கள் நேற்று பிற்பகல் குளத்திற்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயிருந்தனர்.

இவ்வாறு காணாமல் போன இருவரின் சடலங்களும் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 20 மற்றும் 48 வயதுடைய இருவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.