நீரில் மூழ்கிப் போன கிராமம் மீண்டும் கண்டுபிடிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

சில மாதங்களுக்கு முன்னர் நீரில் மூழ்கிப் போன கிராமம் ஒன்று மீண்டும் வழமையான நிலைக்கு வந்துள்ளது.

சிலாபம் மைல்குளம் - ஈபட் சில்வா தோட்டத்தில் சுமார் 800 குடும்பங்களின் வீடுகளில் நீர் வடிந்து செல்லாமல் தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பல பகுதி நீர்த்தேக்கங்களின் நீர் அந்த கிராமத்தின் ஊடாக பயணிப்பதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வருடத்தின் ஒவ்வொரு மழை காலத்திலும் இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான அனர்த்தம் காரணமாக அந்த பகுதி மக்களின் தினசரி வாழ்க்கை மோசமாக பாதிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

வீடுகள் நீண்ட காலமாக நீரில் மூழ்கியுள்ளமையினால் நிர்மாண நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.