அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கான புதிய 3 மாடிக்கட்டடம்

Report Print Rusath in சமூகம்

அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் வகுப்பறைக்கான புதிய 3 மாடிக்கட்டடம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனால் குறித்த கட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்திற்கமைவாக, 26 மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர், அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.