வித்தியா, றெஜினாவுக்கு ஏற்பட்ட நிலைய இனி யாருக்கும் ஏற்படகூடாது!

Report Print Murali Murali in சமூகம்

புங்குடுதீவில் வித்தியா, சுழிபுரத்தில் றெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அனைவரும் ஒன்றியை வேண்டும் என வடமாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள், மதத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என சமூக அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். வேம்படி மகளீர் கல்லூரியின் 180 ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழா நிகழ்வும் இன்று காலை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

“வீண் உணர்ச்சி பேச்சுக்கள், கிளர்ச்சிகளினால் இவ்வாறான செயல்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது. இவை ஏன் நடைபெறுகின்றன என்பதன் பின்னணிகளை நன்கு விசாரித்து அறிந்து கொள்வது அவசியமானது.

இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டிருக்கின்றபோதும் முழு நாட்டினையும் சோகத்தில் ஆற்றிய சம்பவம் றெஜினாவின் படுகொலை என நான் நினைக்கின்றேன்.

பெரியவர்களின் சண்டையில் பழியை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றும் அறியாத சின்னக்குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றது.

இது மிகவும் கொடூரமான சம்பவம். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.