சிறுவர்கள் மீதான துஸ்பிரயோக குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தல்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பில் இன்று மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றங்களுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் படுகொலையினை கண்டித்து செங்கலடியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முற்போக்கு இளைஞர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புகள், மாணவர்கள் ஆகியோரின் இணைவில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.