மூன்று பெண்களை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்

Report Print Shalini in சமூகம்
241Shares

மாத்தறை - ஊருபொக்க, கல்பொக்க பிரதேசத்தில் கத்தி குத்துக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 28 வயதான பெண் உயிரிழந்துள்ள நிலையில், 32 மற்றும் 64 வயதான ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட 40 வயதான நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மனநோய் முற்றியதால் இந்த கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.