வடக்கு மக்களை விட இந்தியாவே மத்திய அரசுக்கு முக்கியம்

Report Print Shalini in சமூகம்
96Shares

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வந்து மீன்பிடிப்பதால் இலங்கைக்கு 6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுமார் 100க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு சொந்தமான மீன்படி உபகரணங்களை அரசுடமை ஆக்குமாறு யாழில் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தனர்.

ஆனால் இந்தியாவுடன் உள்ள நட்புறவு காரணமாக இவர்களை விடுவிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

ஆகவே கடற்றொழிலை ஆதாரமாக கொண்டு வாழும் வடக்கு மக்களை விட இந்தியாவுடன் இருக்கும் உறவே பெரிதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.