யாழ். வட்டுக்கோட்டை மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கைகள் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மேலதிகமாக 60 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“மானிப்பாய் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுழிபுரம் சிறுமி படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரும் கைதாகியுள்ளார்.
வட்டுக்கோட்டை வன்புணர்வுக் கொள்ளை தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
வட்டுக்கோட்டை, இளவாலை பகுதிகளில் இரவுநேரத்தில் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. அந்தப் பகுதிகளில் மேலதிகமாக 60 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” - என்றார்.