றெஜீனாவின் ஆவியாக வேடமிட்ட முன்பள்ளிச் சிறுமி!

Report Print Rakesh in சமூகம்

யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட பாடசாலைச் சிறுமி றெஜீனாவுக்கு நீதி கோரி பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சங்கானை பகுதியிலுள்ள முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வில் சிறுமியொருவர் விநோத உடைப்போட்டியில் றெஜீனாவின் ஆவிபோன்று வேடமிட்டுள்ளார்.

இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சங்கானை சலேசியார் முன்பள்ளியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில், தனது

படுகொலைக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று றெஜீனாவின் ஆவி போன்று வேடமிட்டுள்ளார்.

“நான் இறந்த றெஜீனா. என் சாவுக்கு நீதி வேண்டும். சிறுவர் மீதான துர்நடத்தைகள், படுகொலைகள் தடுக்கப்படவேண்டும். என்போல் இனி ஒருவரும் இறக்கக்கூடாது.

என்னை கொன்றவர்களுக்குத் தகுந்த தண்டனை வேண்டும்” என்று அவர் தாங்கியிருந்த பதாகையில் எழுதப்பட்டிருந்தது.