இலங்கை தமிழ் குடும்பத்திற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நிலை! குடியுரிமை தர மறுக்கும் அரசு

Report Print Ajith Ajith in சமூகம்
94Shares

அவுஸ்திரேலியாவில் நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தினருக்கு நீதிவேண்டும் எனக்கோரி, அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து பையோலா பகுதி மக்கள் தொடர்ந்தும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கைளை சேர்ந்த நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோரும் அவர்கள் இரண்டு குழந்தைகளும் நாடு கடத்தப்படுவதற்காக மெல்போனில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

எனினும் அவர்களை நாடு கடத்தவேண்டாம் என்றுக்கோரி பையோலா உள்ளுர் மக்கள் தொடர்ந்தும் கடந்த ஒரு மாதக்காலமாக போராட்டம் நடத்திவருகின்றனர்

கடந்த வாரம் மெல்போனில் இலங்கை தமிழ் குடும்பத்தின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது பையோலா மக்கள் சுமார் 2ஆயிரம் கிலோமீற்றரை கடந்து அங்கு சென்று தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்

அத்துடன் அவுஸ்திரேலியாவின் குடிவரத்துறை அமைச்சர் பீட்டர் டட்டனிடம் நேரடியான கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளார்கள்.

எனினும், அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் தமது நிலைப்பாட்டில் இருந்து மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.