மன்னார் மடு திருத்தல ஆடி மாத திருவிழா! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

Report Print Ashik in சமூகம்
128Shares

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வெல்ட் சில்வா ஆண்டகை இணைந்து இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியினைத் தொடர்ந்து மடு அன்னையில் திருச்சொரூப பவனியும், அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது.

இதன் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை ஆண்டகை உள்ளிட்ட பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா கடந்த 23ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்ட நிலையில், இன்று திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.