குளவிக்கொட்டுக்கு இலக்காகி 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Thirumal Thirumal in சமூகம்
42Shares

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 15 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் குயின்ஸ்லேண்ட் பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவி கொட்டுக்கிலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 பேரும் பெண்கள் எனவும், இவர்களில் 12 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 3 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.