தலவல அரச வங்கியில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுதுறையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இதனை அறிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் இந்த வங்கியில் இருந்து 95 மில்லியன் ரூபா பெறுமதியான பணமும் தங்கமும் களவாடப்பட்டன.
இந்தநிலையில் சீசீடிவி கமராவையும் கொள்ளையர்கள் எடுத்துச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.