அனுராதபுரம் - தலாவ நகரில் அமைந்துள்ள அரச வங்கிக் கிளையொன்றில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி 95 இலட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொள்ளையிடப்பட்ட தங்கம் மற்றும் பணத்தின் பெறுமதியை தொடர்ந்தும் கணிப்பிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் சில தரப்பினர் குறித்த வங்கிக் கிளைக்குள் பிரவேசித்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றதாக முறையிடப்பட்டிருந்தது.
இரும்பு வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவியொன்றைப் பயன்படுத்தி வங்கியின் பின்புற நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் மூன்று பெட்டகங்களை உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.