பல குற்றச்சாட்டுக்களுடன் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 8 வருடங்களின் பின்னர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
60Shares

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் 11 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு இத்தாலி நாட்டைச்சேர்ந்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே இந்த நபருக்கு முதல் தடவையாக திருகோணமலை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இவரை பொலிஸார் 8 வருடங்களாக தேடி வந்த நிலையில், இன்றைய தினம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது, வீட்டை உடைத்து 20, 400 ரூபா பணமும், 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகையும் திருடப்பட்டுள்ளதாகவும்,வௌிநாட்டு பெண்ணிடமிருந்து 20, 000ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி கொள்ளையடிக்கப்பட்டதாகவும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் குச்சவெளி, கும்புறுபிட்டி, நாவற்சோலையைச் சேர்ந்த நாகநாதன் நவநீதராஜன் (26வயது) என தெரியவந்துள்ளது.