தமிழகம் - பவானிசாகர் அரச ஆரம்ப பாடசாலையின் சத்துணவு கூடத்தில் இருந்து சமயல் பாத்திரங்களை திருடியதாக தெரிவித்து இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
32 வயதுடைய இலங்கை அகதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பாடசாலை விடுமுறை என்பதால் பாடசாலையின், சத்துணவு கூடத்தில் நுழைந்த குறித்த நபர் சமையல் பாத்திரங்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாடசாலை சார்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.