சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் : முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - பாலிநகர், பாண்டியன்குளம் ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பாண்டியன்குளம், பாலிநகர் ஆகிய பகுதிகளில் அதிகளவான மக்கள் சிறுநீரக நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் குறித்த பகுதிகளில் சுத்தமான குடிநீரைப்பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே மேற்படி பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குறைந்த தொகை பணத்திற்கு வழங்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கி மேற்படி கிராமங்களில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள் மூலம் அல்லது ஆலய நிர்வாகம் ஊடாகவே சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த கோரிக்கைகள் தொடர்பில் பல்வேறு தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதனை விரைவாக ஏற்படுத்தி தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.