அக்கிராசன் மன்னனின் சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு

Report Print Arivakam in சமூகம்

அக்கராயன் பிரதேசத்தை ஆண்ட குறுநில மன்னனான அக்கிராசன் மன்னனின் உருவச்சிலை திறப்பு விழா நாளை மறு தினம் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு நாளை மறு தினம் பிரதேசசபையின் தவிசாளர் அ.வேழாமலிகிதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, உருவச்சிலையானது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அம்பலப்பெருமாள்ச் சந்தியில் நிறுவப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, சி.சிறீதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, இந்த நிகழ்வில் அனைவரை கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.