வெளிநாடு ஒன்றில் ஆபத்தான நிலையில் இலங்கை தமிழர்கள்!

Report Print Murali Murali in சமூகம்

மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தை 11 இலங்கை தமிழர்கள் எதிர் நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 11 பேரும் பெக்கன் நனாஸ் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களை விடுவிக்க வேண்டும் என அந்நாட்டு மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தி வருகின்றன.

சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்திற்கு செல்ல முற்பட்ட நிலையில், 100க்கும் மேறபட்ட இலங்கை தமிழர்கள், மலேசிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 120 பேர் வரையில், ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த 11 பேரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த அனைவரையும் விடுவிக்க வேண்டும் என அந்நாட்டு மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest Offers