றெஜினாவின் படுகொலையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Yathu in சமூகம்

யாழ். சுழிபுரம் பகுதியை சேர்ந்த றெஜினாவின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சி - முரசுமோட்டை றோ.க வித்தியாலய மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது நாடு முழுதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளுக்கு கண்டனமும் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலை வளாகத்தில் ஆரம்பமான குறித்த பேரணியில் அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.