கொழும்பில் வீடுகளை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபடும் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோட்டை, புறக்கோட்டை மற்றும் ஹோகந்தர பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கொல்லன்னாவை, ரஜமஹா விகாரையிலும், கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மிரிஹான, அத்துருகிரிய, தலங்கம, பியகம ஆகிய பிரதேசங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் 18, 19 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கோட்டை, புறக்கோட்டை மற்றும் ஹோகன்தர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Latest Offers