கதிர்காம கொடியேற்றத்திற்கு மலையகத்தில் இருந்து பக்தர்கள் படையெடுப்பு

Report Print Shalini in சமூகம்

கதிர்காம கொடியேற்றத்தில் கலந்துகொள்வதற்காக மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் படையெடுத்துள்ளனர்.

கதிர்காம கொடியேற்றம் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த கொடியேற்றத்தில் கலந்துகொள்வதற்காக கொட்டகலை, கல்மதுரை ஆலயத்திலிருந்து இன்று பாதயாத்திரை ஆரம்பமானது.

இதில் கொட்டகலை, பூண்டுலோயா, டயகம, மடக்கும்புர, நுவரெலியா ஆகிய பகுதியிலிருந்து பக்த அடியார்கள் பாத யாத்திரையில் இணைந்து கொண்டுள்ளனர்.

மலையக பிரச்சினைகள் தீர்ந்து முழு நாட்டிற்கும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும் என்பதற்காக இந்த பாதயாத்திரையை மேற்கொள்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.