பத்து கோடி ஏற்றுமதிப் பயிர் நடுகை: யாழில் ஆரம்பம்

Report Print Sumi in சமூகம்

பத்து கோடி ஏற்றுமதி பயிர் நடுகை செய்வதற்கான ஆரம்ப நிகழ்வினை விவசாய அமைச்சர் தயா கமகே யாழில் ஆரம்பித்து வைத்ததுடன், விவசாயிகளுக்கான பயிர்களையும் வழங்கி வைத்தார்.

வடமாகாண விவசாய மற்றும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் பத்து கோடி ஏற்றுமதிப் பயிர் நாட்டுவதற்கான பாரிய திட்டத்தினை ஜனாதிபதி தலைமையில் ஏற்பாடு செய்துள்ளமையினால், அதன் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் யாழ்.மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏற்றுமதிப் பயிர்களை வழங்கி வைத்ததுடன், உரம் மற்றும் சிறப்பாக விவசாய செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண விவசாய பணிப்பாளர், யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.