மொரிசியஸ் கப்பல் ஒன்றில் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொங்கொங்கில் பதிவு செய்யப்பட்ட குறித்த கப்பல், மொரிஸியஸூக்கும் மடகஸ்காருக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த கப்பலில் இந்தியா, இலங்கை உட்பட்ட நாடுகளின் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .
இந்த நிலையில் பொதி ஒன்றை சோதனையிட்ட மொரிஸியஸின் அதிகாரிகள் அதிலிருந்த ஹெரோய்ன் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருள் இலங்கை ரூபாவின் பெறுமதியில் 63 மில்லியன் என தெரியவந்துள்ளது.
மேலும், இதனையடுத்து போதைப்பொருள் தம் வசம் வைத்திருந்த இலங்கைப் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.