வார இறுதி நாட்களில் பூட்டப்படும் சுற்றுலா மையம்: மக்கள் விசனம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு, விசுவமடு, அட்டைக்குளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தினை வார இறுதி நாட்களில் திறந்து விடுமாறு பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட விசுவமடு அட்டைக்குளம் பகுதி வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா என்பன சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.

இதனை பாடசாலை விடுமுறை நாட்களில் திறப்பதன் மூலம் இப்பிரதேசத்தில் உள்ள சிறுவர்கள் பெற்றோர்களுடன் சென்று பொழுது போக்குகளில் ஈடுபட முடியும் என்றும், இதனை விடுமுறை நாட்களில் இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள இப்பிரதேச மக்கள், இதற்கான மின்சார வசதிகளையும் ஏற்படுத்துமாறு கோரியுள்ளனர்.