பிஸ்கட் பக்கெற்றை திருடிய பெண்ணுக்கு நீதவான் கொடுத்த தண்டனை

Report Print Kamel Kamel in சமூகம்

கம்பஹா - யக்கல, சியனே விலேஜ் பிரதேசத்தில் அமைந்துள்ள கடையொன்றில் 120 ரூபா பெறுமதியான பிஸ்கட் பக்கெற் ஒன்றை கடையிலிருந்து திருடிய பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று கம்பஹா நீதவான் டி.ஏ.ருவான் பத்திரண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபரான பெண் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் குறித்த பெண்ணுக்கு ஓராண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பெண் 1500 ரூபா அபராதமும், 2500 ரூபா நட்டஈடும் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வத்தேக சிரியாவதி என்ற பெண்ணுக்கே சம்பவம் தொடர்பில் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.