வீதியின் குறுக்காக சென்ற மாடொன்றினால் நேர்ந்த விபரீதம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற முதியவரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த முதியவர் சென்ற மோட்டார்சைக்கிள், வீதியின் குறுக்காக சென்ற மாடொன்றுடன் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.