தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து : தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழப்பு!

Report Print Vethu Vethu in சமூகம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையின் குருதுகஹஹெதெக்ம மற்றும் பத்தேகம வெளியேறும் இடத்தில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனம் நெடுஞ்சாலையில் புரண்டு சென்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் வாகனத்தில் இருந்த பெண் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.

சாரதி மற்றும் மற்றொரு பெண் படுகாயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் தேசிய இளைஞர் சேவை சபையின் மஹரகம பயிற்சி நிலையத்தில் நடன ஆலோசகராக செயற்பட்டுள்ளார். பாதுக்க வெரகல பிரதேசத்தை சேர்ந்த நதீஷா பெரேரா என்றவர் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாகும்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மோட்டார் வாகனத்திற்குள் பயணித்தவர்கள் பாதுகாப்பு பட்டியை அணிந்திருக்கவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.