விசேட அதிரடிப்படையின் ஒத்துழைப்புடன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது

Report Print Kamel Kamel in சமூகம்

மூன்றரை ஆண்டுகளில் 2,500 கிலோகிராம் எடையுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையில் இவ்வாறு பாரியளவிலான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் எட்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 25,000 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு பிரிவு, விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் மூலம் போதைப்பொருளும், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.