மீன்பிடிக்கச் சென்ற மீனவருக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாகரை, சின்னத்தட்டுமுனை களப்பு பகுதியிலிருந்து இன்று மீனவரொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வாகரை பிரதேசத்தை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா கயிலைநாதன் (வயது 56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை சின்னத்தட்டுமுனை களப்பு பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். எனினும் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்களும், சக மீனவர்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையியே அந்த நபரின் சடலம் களப்பு நீருக்குள் கிடப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன், குறித்த மீனவர் வலைவீசிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு களப்பு நீருக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.