நாடுகடத்தப்பட்டால் குடும்பம் சிதைந்துவிடும்: கண்ணீர் வடிக்கும் இலங்கை பெண்

Report Print Manju in சமூகம்

எனது மனைவி இலங்கை என்பதால் குடும்பம் சிதைந்துவிடும், அதை நான் விரும்பவில்லை என ஷார்ஜாவில் 30 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்து வரும் மதுசூதனன் என்பவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் கொல்லம் நகரை சேர்ந்த மதுசூதனன், கடந்த 1979ம் ஆண்டு ஷார்ஜாவுக்கு புலம்பெயர்ந்து சிறு சிறு வேலைகளை செய்து வாழ்ந் வந்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை பெண்ணான ரோஹினி என்பவரை 1988ம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.

மாதம் 4000 திர்ஹாம் சம்பளத்தில் வேலை பார்த்த மதுசூதனனுக்கு வேலை பறிபோக சட்டவிரோதமாக ஷார்ஜாவில் வசித்துள்ளனர்.

இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். ஷார்ஜாவில் வசித்த மக்களின் உதவியுடன் நால்வருக்கு இந்திய கடவுச்சீட்டு எடுத்துள்ளனர். அதுவும் 2012ம் ஆண்டு காலாவதியாக, எந்தவித ஆவணங்களும் இன்றி 30 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

தனது பிள்ளைகளுக்கும் விசா எடுக்க முடியாத நிலையில், வீட்டிலேயே ரோஹினி பாடம் கற்பித்து வந்துள்ளார்.

இந்நிலையில் எந்நேரத்திலும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் இந்த குடும்பத்திற்கு எழுந்துள்ளது.

அப்படியே நாடு கடத்தப்பட்டாலும் மதுசூதனன் மற்றும் பிள்ளைகள் இந்தியாவுக்கும், ரோஹினி இலங்கைக்கும் கடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுசூதனன் கூறுகையில்,

இந்த சூழலில் நான் கேரளாவிற்கு செல்ல விரும்பவில்லை, அனைத்து பிரச்சினைகளும் முடிந்த பின்னர் எனது குடும்பத்துடன் செல்ல வேண்டும்.

இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் பலரும் எங்களுக்கு உதவி செய்கின்றனர், வேலை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

மேலும் பொது மன்னிப்பு சபையின் முடிவை நோக்கி எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.