காணியொன்றில் இருந்து முன்னாள் போராளி ஒருவரின் தேர்ச்சி அறிக்கை மீட்பு

Report Print Mohan Mohan in சமூகம்

விடுதலைப் புலிகளின் கிளைமோர் கண்ணிவெடிப் பயிற்சியாளர் ஒருவரின் தேர்ச்சி அறிக்கை ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேற்கில் வசிக்கும் த.நிமலேஸ் என்பவர் அவரது சொந்தகாணியை சீராக்கும்போதே, குறித்த அறிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேர்ச்சி அறிக்கையில் செந்தூரன் கிளைமோர், தோழநம்பி கிளைமோர், கீர்த்தி கிளைமோர், இராகவன் கிளைமோர், பாவன் கண்ணிவெடி, அம்மா வாகனக் கண்ணிவெடி, தட்சாயினி கண்ணிவெடி, துரப்பெதிர்ப்புக் கண்ணிவெடி, றிமோட் (கிளைமோர்), தகர்ப்பு கருவி, என்பன விடுதலைப் புலிகளினால் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தேர்ச்சி அறிக்கை தயான் இ:1591 மேற்கு கட்டளைப்பணியப் போராளி ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.