திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் கேரள கஞ்சா வைத்திருந்த மூவரை வெவ்வேறு இடங்களில் இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பொலிஸ் பிரிவில் ஐந்நூறு மில்லி கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இருவரை கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபர்கள் கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருநூறு மில்லி கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமேதகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.