வவுனியாவில் பிரபல ஹெரோயின் வியாபாரி கைது

Report Print Theesan in சமூகம்

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியாவில் பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா நெளுக்குளம், காத்தான் கோட்டம் பகுதியில் ஹெரோயின் கஞ்சா வியாபாரிகள் அதிகளவில் காணப்படுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியை சுற்றிவளைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரி ஒருவர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத்துறையினருக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இன்று பிற்பகல் 4 மணியளவில் காத்தான்கோட்டம் பகுதியில் வைத்து ந. மகேஸ்வரராஜா (ரமேஸ்) 34வயதுடைய பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரியை 970 கிராம் ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.