400 குடும்பங்களுக்கு வீட்டுக் கடன் பத்திரம் கையளிப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 400 வறிய குடும்பங்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொள்வதற்கான வீட்டுக் கடன் பத்திரம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

சேருவல தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வைத்தியர் அருண சிறிசேனவினால் இந்தக் கடன் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், சேருவில, தம்பலகாமம், அக்போபுர மற்றும் கல்மெட்டியாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 400 வறிய குடும்பங்களுக்கு இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது சேருவில பிரதேச சபை தவிசாளர் எ.எ.ஆர்.ரனசிங்க, கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் பீ.எச்.சமன் ஜனக வண்டார மற்றும் 97 ஆம் கட்டை விகாரையின் விகாராதிபதியும் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களும் ஆதரவாளர்களும் பொது மக்களும் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களின் அமைச்சியின் உதவியுடன் உதவியுடன் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.