லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி மட்டக்களப்பில் கைது

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் நிலையத்தில் நிர்வாக மற்றும் குற்றப் பிரிவு ஆகியவற்றின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வந்த லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி, பாசிக்குடா, கல்குடா பிரதேசத்தில் வியாபார நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனுமதியை பெற்றுக் கொடுப்பதற்காக வர்த்தகர் ஒருவரிடமிருந்து 3 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட​போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.