கொழும்பில் கொல்லப்பட்ட நவோதயா கிருஷ்ணாவின் உடலுக்கு பெருமளவான மக்கள் கண்ணீர் அஞ்சலி

Report Print Akkash in சமூகம்
689Shares

கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதயா கிருஷ்ணாவின் உடலுக்கு பெருமளவான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணா என்று அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் நேற்று காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட கிருஷ்ணா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி தனது 40வது வயதில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உயிரிழந்த கிருஷ்ணாவின் உடல் நவோதய மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவான மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட கிருஷ்ணாவின் இறுதி கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.