பிரித்தானியா சென்ற இரு இலங்கைத் தமிழர்களுக்கு சிறைத்தண்டனை

Report Print Vethu Vethu in சமூகம்

போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூருக்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவருக்கு 8 மாத சிறைத்தண்டனை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

45 வயதான என்.கனகரத்னம் மற்றும் 27 வயதான கந்தசாமி நித்தியானந்தம் ஆகியோருக்கே சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அவர்கள் இருவரும் சிங்கப்பூர் சன்கி விமான நிலையத்தில் அந்த நாட்டு குடிவரவு, குடியகல்வு அதிகாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைக்காக இன்னுமொரு இலங்கையரின் உதவியுடன் குறித்த இருவரும் போலி கடவுச்சீட்டில் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

பிரித்தானியாவின் லண்டன் நகரத்திற்கு செல்வதற்காக அவர்கள் சிங்கப்பூர் ஊடாக பயணித்துள்ளனர்.

சிங்கப்பூர் செல்வதற்காக 33000 மற்றும் ஒரு லட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் உண்மையான நபர்கள் புகைப்படம் இல்லாமையினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறுவோருக்கு 10 வருட சிறைத்தண்டனை அல்லது 10000 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.