விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடியவர்களுக்கு கிடைத்த கைக்குண்டு

Report Print Mohan Mohan in சமூகம்
137Shares

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை ஒன்றும், கைக்குண்டு ஒன்று மாத்திரமே மீட்கப்பட்டுள்ளது.

அண்மையில் விமானப்படையினை சேர்ந்த மூன்று பேர் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது இவர்களை கைது செய்த பொலிஸார் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இவர்கள் குறித்த பகுதியில் சுமார் 5 அடி ஆழம்வரை தோண்டியிருந்தனர்.

குறித்த பகுதியே நீதிமன்றின் அனுமதியுடன் நேற்று தோண்டப்பட்டது. இதன்போது விடுதலைப்புலிகளின் சீருடை ஒன்றும், கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி சட்டவிரோதமாக தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட, இரு தினங்களில் ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், சீருடை மற்றும் கொடியுடன் பலர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.