காணாமல் ஆக்கப்பட்டவர் அலுவலகத்தின் செயற்பாட்டை புரிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள்

Report Print Ashik in சமூகம்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயமாக திறக்கப்பட்டுள்ள அலுவலகம் சம்பந்தமாக உடன் புரிந்து கொள்ள முடியாவிடினும் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து பார்ப்பது நலம் என இலங்கைக்கான கனடிய தூதுவர் டான்ட் மிக்கினோ தெரிவித்துள்ளார்.

கனேடிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டான்ட் மிக்கினோ நேற்று மாலை மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலுவலகத்தின் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் ஆளுநர் சபை பிரதி நிதிகளையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது, இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விடயத்தில் கனேடிய அரசாங்கமானது பெரும் ஆதரவை வழங்கி வருகின்றது.

இதன்போது டான்ட் மிக்கினோ,

இதனால் வடக்கு கிழக்குப் பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் முகமாகவே நான் மன்னாருக்கு வந்துள்ளேன்.

நான் இலங்கைக்கான கனேடிய தூதுவராக வந்து ஒன்பது மாதங்கள் தான். தற்பொழுது மன்னாருக்கு வந்தது எனக்கு இது முதல் தடவையாகும்.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவாகிய நீங்கள் என்னிடம் என்ன கேட்க விரும்புகின்றீர்கள்? என கேட்டார்.

இந்நிலையில், இந்த அலுவலகம் அரசுக்கு சாதகமாகத்தான் செயல்படும் போல் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுவதாக பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள கனேடிய தூதுவர்,

இந்த அலுவலகத்தை முன்னெடுத்துச் செல்பவர் சாலிய பீரீஸ். அவர் மிகவும் நல்லவர். இருந்தும் கொஞ்சக் காலத்துக்கு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு கொடுத்து பாருங்கள்.

இப்பொழுது அவர்களின் செயல்பாட்டை உடன் கனிக்க முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கியவர்களையும் கொண்ட திட்டங்களைகொண்டே பல நிபுணர்களை குறித்த அலுவலகம் உள்வாங்கி செயல்படுகின்றது.

இதற்கு கனடா அரசாங்கம் இவர்களுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன் ஊக்கத்தையும் வழங்குகின்றது. கனடாவைச் சேர்ந்த ஒரு சில தொண்டர் பணியாளர்களும் இவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனார்.

கனேடிய அரசால் வழங்கப்படும் உதவிகள் உண்மையில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு போய் சேர்கின்றதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.