நாளை யாழ்ப்பாணம் செல்லும் நாமல்! கந்தசுவாமி ஆலயத்திற்கும் செல்கின்றார்

Report Print Murali Murali in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாமலின் இந்த விஜயத்தின் போது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லவுள்ளதாகவும், அங்கு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.