பிரபல பாடகி ப்ரியணி ஜயசிங்க திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாரா?

Report Print Murali Murali in சமூகம்

பிரபல சிங்களப் பாடகி ப்ரியணி ஜயசிங்க திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், மிகக் கூர்மையான, கத்தரிக்கோலின் துண்டு ஒன்று சடலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவுதம் பொலிஸார் கூறியுள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரியாணியின் கணவர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, ப்ரியானி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் கைதான அவரது கணவரை எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பாடகி ப்ரியணி ஜயசிங்க, பாணந்துறையிலுள்ள அவரது வீட்டிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 அளவில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.