மனநலம் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிப்பெண் பாலியல் துஸ்பிரயோகம்! மற்றுமொரு இலங்கை அகதிக்கு ஆயுள் தண்டனை

Report Print Murali Murali in சமூகம்

மனநலம் பாதிக்கப்பட்ட இலங்கை அகதி பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மற்றும் ஒரு இலங்கை அகதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் மகிளா நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிபட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. குறித்த முகாமில் சிவபாக்கியம் என்பவரின் மகள் 38 வயதான தாரணி (மனநலம் பாதிக்கப்பட்டவர்) வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அதே முகாமில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவர் தாரணியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 3ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து குளித்தலை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சம்பவம் குறித்து கரூர் மகிளா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜ்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.