வவுனியாவில் முச்சக்கரவண்டியினை உடைத்து பணம் திருட முயன்ற நபர் கைது

Report Print Theesan in சமூகம்
47Shares

வவுனியாவில் 6 முச்சக்கரவண்டியினை உடைத்து பணம் திருட முயன்ற நபர் கைதுவவுனியா பொது வைத்திசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 முச்சக்கரவண்டிகளில் திருடுவதற்கு முயன்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரை இன்று சம்பவ இடத்தில் வைத்துக் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளிலுள்ள முன்பக்கத்திலுள்ள ஆவணங்கள் வைக்கும் பகுதியைத் திறந்து அதற்குள்ளிருந்த பொருட்களைத் திருடுவதற்கு முயன்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் சிலாவத்துறையைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் அவருக்கு தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.