தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 400 கிலோகிராம் கடலட்டைகள்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 400 கிலோகிராம் கடலட்டைகள் நேற்று தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

கரையோர கண்காணிப்பு காவல்துறையினரால் இந்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 50 பைகளில் பொதியிடப்பட்டிருந்த இந்த கடலட்டைகளை கடத்த முயன்றவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக ராமநாதபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய சட்டத்தின்படி கடலட்டைகளை கடத்துவது பாரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.