மூன்று வியாபார நிலையங்களுக்குள் ஒரே இரவில் நுழைந்த நபர்கள் செய்த காரியம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - குருமன்காட்டு சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் இருந்து அடையாளம் தெரியாத நபர்களால் பணம் திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் இந்த திருட்டு சம்பவங்கள் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குருமன்காட்டு சந்தியில் தொடர்ச்சியாக அமைந்துள்ள பலசரக்கு வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், தொலைத் தொடர்பு நிலையம் என்பவற்றிலேயே பணம் திருடப்பட்டுள்ளது.

மூன்று வர்த்தக நிலையங்களினதும் கூரைகளை பிரித்து உள் நுழைந்த நபர்கள் பணத்தை எடுத்து சென்றுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதிக்கு இன்று காலை சென்ற பொலிஸார் விசாரணைகளுக்காக மூன்று வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் இது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.